பள்ளி வேன் கவிழ்ந்து 3 மாணவி படுகாயம்

ஆத்துார்: வாழப்பாடி, பழனியாபுரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. அப்பள்ளி வேனை, கருத்தராஜாபாளையத்தை சேர்ந்த, டிரைவர் சிவபெருமாள், 60, நேற்று ஓட்டிச்சென்றார். மல்லியக்கரை, கோபாலபுரம், களரம்பட்டி பகுதிகளை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சென்று கொண்டிருந்தனர். காலை, 8:40 மணிக்கு, களரம்பட்டி பிரிவு சாலையில் சென்றபோது, முன்புறம் வந்த பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் வேனை திருப்பினார்.


அப்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 7 முதல், 14 வயதுடைய, 14 மாணவ, மாணவியர், 2 ஆசிரியை, டிரைவர் என, 17 பேர் காயம் அடைந்தனர். பின் ஆரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். 3 மாணவியர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement