அம்பேத்கர் நகரில் சாலை மோசம் அனுதினமும் மக்கள் அவஸ்தை

போத்தனூர்:கோவை மலுமிச்சம்பட்டி பஞ்., முதல் வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகரில், நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள தார் சாலைகள், 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. தற்போது முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது.

அது போல், இரண்டாவது வார்டுக்குட்பட்ட ஜியான் பள்ளியை கடந்து, கற்பக வள நகர் வரை செல்லும் முக்கிய சாலையும் பரவலாக சேதமடைந்துள்ளது.

குறிப்பாக, அப்துல்கலாம் நகர் அருகே மிக மிக மோசமாக இருப்பதால், வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

வாகனங்களும் பழுதாகின்றன. இச்சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, பஞ்., செயலர் கார்த்தியிடம் கேட்டபோது, ''உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடியும் முன்பே, கற்பக வள நகர் வரை செல்லும் சாலையை, சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. தனி அலுவலரை அழைத்துச் சென்று காண்பித்துள்ளேன். விரைவில் சாலை சீரமைக்கப்படும். அதுபோலவே அம்பேத்கர் நகர் சாலைகளும் சீரமைக்கப்படும், என்றார்.

Advertisement