ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டுகோள்

கோவை:கோவையில், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக, 3,000 ரூபாய்- வழங்க கோரி, தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில், கலெக்டர் அலுவலகம் எதிரில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் ஆறுமுகம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:

தமிழக அரசு, உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும். மகளிர் உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி, ஓய்வூதியம் வழங்குவதை தடுக்கக்கூடாது.

வீட்டு மனை உள்ள தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

சங்கத்தின் -மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல், ஏ.ஐ.டி.யு.சி., கட்டடத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement