சரவணா ரோட்டில் சங்கடம் எப்ப சார் ரோடு போடுவீங்க?

திருப்பூர்:திருப்பூர் மாநகர பகுதியில் பல இடங்களில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக தோண்டப்படும் ரோடுகள் திரும்ப போடுவதில்லை.

குண்டும் குழியுமான ரோடுகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மக்கள் பிரிதிநிதிகள் மேயர், கமிஷனர் உள்ளிட்டவர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை அனைத்தும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளது. செயலில் கிடையாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது. அவ்வகையில், திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகே அவிநாசி ரோடு - பி.என்., ரோடு இணைக்கும் வகையில் உள்ள சரவணா ரோடு கடந்த, மூன்று வாரங்களுக்கு முன் குழாய், ரோடு பணிக்காக தோண்டப்பட்டது.

ஆனால், தற்போது வரை, அந்த ரோடு போடப்படாமல் பணிகள் கிணற்றில் போட்டாக கல்லாக உள்ளது. இந்த ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் புலம்பியபடி கடந்து வரும் சூழலில் உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு, ரோட்டை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement