கதிரவன் மெட்ரிக் பள்ளியில் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி

திருப்பூர்:மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளியில் பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர் அருகே மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளியில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் ஸ்ரீ சரண்யா ராஜ்குமார், பள்ளி முதல்வர் காந்தி பிரியதர்சினி, கல்வி ஆலோசகர் செல்வி மீக்கல் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக லோலக் பேபி பங்கேற்று சிறப்புரையாற்றினார். வாழ்க்கை பாடம் வாயிலாக கற்றுக்கொண்ட நற்பண்புகளையும், அதனால் அடைந்த முன்னேற்றம் குறித்து கூறினார்.

தொடர்ந்து, வாழ்க்கையின் முக்கியத்துவம், சிறந்த ஆசிரியர்களின் துணை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை வெற்றிக்கு வழிகாட்டும் எனவும், எத்துறையை தேர்ந்தெடுப்பது என்பதை காட்டிலும் எவ்விடத்தில் அத்துறையில் அமர்வது என்பதை கனவாக கொண்டுவிட முயற்சி செய்யுங்கள் என்று பேசினார்.

Advertisement