தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சாந்தி தலைமை
யில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், அங்கன்வாடி ஊழியர்களின் பணிகளில், கண் கருவிழி பதிவு செய்தல் மற்றும் முகப்பதிவு போட்டோ எடுப்பதை விலக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பத்மாவதி, கலா, விஜயலட்சுமி, கோகிலா, மணிமேகலை உள்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement