உளுந்து அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
குளித்தலை: தோகைமலை யூனியன் பகுதி களில், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளுந்து சாகுபடி முறைக்கு வம்பன் 5, வம்பன் 6 ஆகிய ரகங்கள் ஏற்றதாக உள்ளது. இந்த ரகங்கள், 65, முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும். உளுந்தை தனிப்பயிராக விதைப்பதற்கு ஒரு ெஹக்டேருக்கு, 20 கிலோவும், ஊடு பயிராக விதைப்பதற்கு, 10 கிலோவும் தேவை. உளுந்து சாகுபடியை பொறுத்தவரை, அதிக மகசூல் பெறுவதற்கு, 5 கிலோ டிஏபி கரைசலை, 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி தெளிந்த கரைசலை, 250 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். அப்போது வயலில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த முறையை, 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் இடைவெளி விட்டு மறுமுறை தெளிக்க வேண்டும். மேலும் மஞ்சள் நோயால்
பாதிக்கப்பட்ட செடிகளை உடனே களைதல் வேண்டும்.
உளுந்து சாகுபடியை பொறுத்தவரை, பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டும். வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த, சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு ஏக்கருக்கு, 25 கிலோவுடன், 50 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து விதைத்த, 30 நாட்கள் கழித்து மண்ணில் இட வேண்டும். உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள், மேற்படி முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து சாகுபடியை செய்தால், குறைவான செலவில் அதிகமான மகசூலை பெற்று லாபம் பெறலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து