கரூரில் கூலிங்கிளாஸ் கண்ணாடி விற்பனை

கரூர்: கடந்த சில நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை, ஜோராக நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்து, கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், பகல் நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.

மேலும் காவிரியாறு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், மணல் அள்ள தடை விதிக்கப்பட்டும், கரூர் மாவட்டத்தில் இருந்து நாள்தோறும், லாரிகளில் இரவு நேரத்தில் மணல் அள்ளி செல்லப்படுகிறது. அப்போது, சில லாரிகளில் தார்ப்பாய் போடப்படாததால், டூவீலர்கள் மற்றும் நடந்து செல்கிறவர்கள், காற்றில் பறந்து செல்லும் மணல் துகள் களால் அவதிப்படுகின்றனர். இதனால், டூவீலர்களில் செல்கிறவர்கள் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலையோரங்களில் கூலிங் கிளாஸ் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கானா மாநிலம் ைஹதராபாத் நகரில் இருந்து கூலிங்கிளாஸ் கண்ணாடிகள் விற்பனைக்காக தமிழகம் கொண்டு வரப்படுகிறது. குறைந்த பட்சமாக, 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை கூலிங்கிளாஸ் கண்ணாடி விற்பனை செய்யப்படுகிறது. இதை டூவீலர்களில் செல்கிறவர்கள், ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement