பாப்பகாப்பட்டி எல்லை பகுதியில் காளம்மனுக்கு சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராமத்தில் காளம்மன் எல்லை சுவாமி உள்ளது. மாரியம்மன் கோவில் விழா துவங்குவதற்கு முன், பாப்பகாப்பட்டி சுற்று வட்டார பகுதிளில் உள்ள எல்லைகளுக்கு, சுவாமி கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கி இரவு 11:30 மணி வரை சுற்றுப்புற எல்லைகளுக்கு காளம்மன் சுவாமி கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் மா விளக்கு பூஜை செய்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement