ரயில் பயணிகள் சங்க கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஆசாம்கான் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஜெபசிங், பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுதல், சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் கார்த்திகேயன், சிவகுமார், சங்கீதா, சுரேஷ், மொரப்பூர் பயணிகள் சங்க நிர்வாகி ரகுநாதன், வணிகர் சங்க செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தி தொடர்பாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

Advertisement