மனு கொடுக்கும் போராட்டம்

ஓசூர்: ஓசூர், சப் கலெக்டர் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சி சார்பில், மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலாளர் நாகேஷ்பாபு தலைமை வகித்தார். போராட்டத்தில், பாகூர், காரப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் விபரங்களை, நில பதிவேட்டில் ஏற்ற வேண்டும்.

பாகூர் கிராமத்தில் சுடுகாட்டை அளவீடு செய்து, சுற்றுச்சுவர் அமைத்து, தகன மேடை அமைத்து தர வேண்டும். மிடுகரப்பள்ளியில் சுடுகாடு செல்லும் பாதை முழுவதும் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பன உட்பட, 13க்கும் மேற்பட்ட கோரிக்கை அடங்கிய மனுக்களை, சப்கலெக்டர் பிரியங்காவிடம் வழங்கினர்.

Advertisement