பெண் மர்ம சாவு போலீஸ் விசாரணை
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பெண் மர்மமான முறையில், இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் பூசந்திரன். இவரது மனைவி ப்ரியா, 28; இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த, 2019,ல் வெளிநாட்டில் வேலை செய்து வந்த பூசந்திரன் அங்கேயே இறந்தார். இந்நிலையில் பிரியா குழந்தைகளுடன், மாமனார் செக்கடியான் மற்றும் மாமியார் அஞ்சலையுடன், அதையூர் கிராமத்திலேயே வசித்து வந்தார்.
கணவர் இறப்பு தொடர்பாக கிடைத்த, ரூ.23 லட்சம் பணத்தை பிரியா மற்றும் அவரது மாமனார் தரப்பினர் பகிர்ந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு பிரியாவிடம் அவரது மாமனார், அந்த பணம் குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து தகராறு உண்டானது.
அப்போது திடீரென, உடல் நிலை பாதிக்கப்பட்ட பிரியா, கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்து, எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
வேகத்தடை இல்லாத நெடுஞ்சாலை அச்சத்தில் அரசு பள்ளி மாணவர்கள்
-
பிரசவத்தில் தாய், குழந்தை பலி
-
ஆதிதிராவிட நல விடுதி வளாகம் செடி, கொடிகள் வளர்ந்து வீண்
-
'ஜல் ஜீவன்' திட்டத்திற்கான குடிநீர் தொட்டிகள் சேதம்...குற்றச்சாட்டு : ஊராட்சிகளில் இணைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு
-
சமத்துவபுரம் சிறுவர் பூங்கா மேம்படுத்த எதிர்பார்ப்பு
-
ரேஷன் கடை பணிக்காக நிழற்குடைக்கு மூடுவிழா