ஹிந்து முன்னணி தலைவர் காரை பின் தொடர்ந்த கார்; போலீசில் புகார்

பல்லடம்,; ஹிந்து முன்னணி மாநில தலைவர் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கார் குறித்து, பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பல்லடம் வழியாக காரில் கோவை புறப்பட்டார். காரணம்பேட்டை செல்லும்போது, மர்ம கார் ஒன்று, மாநில தலைவரின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளது. இதனால், அவரின் பாதுகாப்புக்காக வந்த வாகனத்தில் இருந்த போலீசார், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கூறுகையில், 'காரணம்பேட்டையில் இருந்து கார் ஒன்று காடேஸ்வரா சுப்பிரமணியம் சென்ற காரை பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் உருது மொழி எழுதப்பட்டிருந்ததாகவும், வலது பக்கம், இடது பக்கமாக மாற்றி மாற்றி காரை இயக்கி பின் தொடர்ந்து வந்துள்ளனர். விசாரணையில், அந்த கார், திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி சென்றதாகவும், ஓவர் டேக் செய்வதற்காகவே பின் தொடர்ந்து சென்றதும் தெரிந்தது. இது குறித்து ஹிந்து முன்னணி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது,' என்றார்.

Advertisement