'இளைஞர்களை திசை திருப்பநடிகர் விஜய் வந்துள்ளார்'
'இளைஞர்களை திசை திருப்பநடிகர் விஜய் வந்துள்ளார்'
மொரப்பூர்:''இளைஞர்களை இன்று திசை திருப்ப, விஜய் உள்ளிட்ட பல்வேறு சக்திகள் வந்திருக்கிறார்கள்,'' என, மா.கம்யூ., கட்சி மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசினார்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமையில் நடந்த, மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய, 24வது மாநாடு நிதியளிப்பு பேரவை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பேசியதாவது:
கும்பமேளாவில், 63 கோடி பேர் புனித நீராடினர். பொரு
ளாதார சீரழிவை மறைக்கவே மத்திய, பா.ஜ., அரசு இறை நம்பிக்கையை மக்களிடையே வளர்த்து வருகிறது.
மும்மொழி கொள்கை என்ற அடிப்படையில் தமிழ் மொழியை அழிக்க நினைக்கின்றனர். இந்தியா முழுவதும் மாநில மொழிகள் அழிந்து வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது.
தமிழ் மொழிக்கு, 8 கோடி மட்டுமே ஒதுக்கின்றனர். மக்காச்சோளத்திற்கு வரி போடுகின்றனர். இளைஞர்களை இன்று திசை திருப்ப, பல சக்திகள் வந்திருக்கிறார்கள். திடீரென பார்த்தால், நாம் தமிழர் எனவும், இன்னொரு பக்கம், நடிகர் விஜயும் வருகிறார். இப்படி பலர் வருகிறார்கள்.
ஏதாவது ஒரு வகையில் மக்களை, இளைஞர்களை திசை திருப்புவது என இருக்கிறார்கள். இளைஞர்களிடம் நேர்மையான கொள்கையை, அணுகுமுறையை விளக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.