மும்மொழி கொள்கைக்கு ஆதரவுபா.ஜ., கையெழுத்து இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவுபா.ஜ., கையெழுத்து இயக்கம்
தர்மபுரி:மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, பா.ஜ., சார்பில் நேற்று, முன்மொழிக்கு ஆதரவாக, தர்மபுரியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில், தர்மபுரி, பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நகர தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இதில், ஐ.டி., விங் திட்ட மேலாண்மை தலைவர் மகேஷ்குமார், கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், 'தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதாக, தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் வருகின்றனர். அதை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தாய்மொழி அறிவு சம்பந்தப்பட்டது. 3வது மொழி என்பது மற்ற மாநிலங்களில் பணிபுரிய, தொழில் தொடங்க அவரவர் விருப்பம் போல், 3வது மொழி தேர்ந்தெடுக்கலாம். ஹிந்தி திணிப்பு என போலியாக சித்தரித்து வரும் நபர்கள் மற்றும் மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.
இதில், பா.ஜ., நிர்வாகிகள் வரதராஜன், மதியழகன், கணேசன், சங்கீதா, பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,
-
தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு
-
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
-
கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்
-
புகார் பெட்டி
-
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு