மலைவாழ் மக்களுக்குசிறப்பு திட்ட முகாம்



மலைவாழ் மக்களுக்குசிறப்பு திட்ட முகாம்


அரூர்:அரூர் அடுத்த கோட்டப்பட்டியில், மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சதீஷ் தலைமை வகித்து, மலைவாழ் மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், மலைவாழ் மக்களுக்கு கல்வி, சுற்றுப்புறத் துாய்மை ஆகியவற்றில் மேம்பாடு அடையச் செய்வது, அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, இணைப்புச் சாலைகள், மின்வசதி மற்றும் வீடுகள் கட்டித் தருதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வளர்ச்சி அடையச் செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிட்லிங் மலைப்பகுதிக்கு புதிய சாலை வசதிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.இதில், எஸ்.பி., மகேஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement