கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில் நுாலகம், வேலைவாய்ப்பு பிரிவு இணைந்து, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. முதல்வர் ரவி தலைமை வகித்தார். கணிதத்துறை தலைவர் ஐயப்பன் முன்னிலை வைத்தார். நுாலகர் கல்யாணி வரவேற்றார்.
எழுத்தாளரும், பேச்சாளருமான ஈரோடு கதிர் பேசுகையில், மாணவர்கள், வேலைக்கான திறமைகளை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களின் உடை நேர்த்தி, முகபாவனை, சரளமாக பேசும் கலை மற்றும் உடல்மொழி என, ஒவ்வொரு வகையிலும் தங்களை செம்மைப்படுத்தி உயர்வு பெற வேண்டும்.
மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், ஒருங்கிணைந்து பணிபுரியும் திறனுடன், தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டால், வாழ்வில் இலக்கை எட்டலாம், என்றார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்றாமாண்டு மாணவர் யோகானந்தன் நன்றி கூறினார்.