கால்நடை மலடு நீக்க முகாம்


கால்நடை மலடு நீக்க முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி:--பொம்மிடி அடுத்த பில் பருத்தியில் கால்நடை மருத்துவம் மற்றும் மலடு நீக்க முகாம் நடந்தது. முகாமை பேராசிரியர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர் ரவி, துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். கால்நடை விஞ்ஞானி தங்கதுரை, கோடை காலத்திற்கான கால்நடை பராமரிப்பு மலடு நீக்கும் முறைகள் பற்றி கூறினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை ஊசி, பரிசோதனை, மலடு நீக்கும், குடற்புழு நீக்கம் தடுப்பூசி, உனினி நீக்கும் மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தார்கள். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

Advertisement