புகார் பெட்டி
பாசன வாய்க்கால் வசதி தேவை
கொசப்பாடி ஏரியிலிருந்து நீர் பாசன வாய்க்கால் இல்லாததால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழுமலை, கொசப்பாடி.
சாலையில் தேங்கும் கழிவு நீர்
சேஷசமுத்திரம் கிராமத்தில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதியின்மையால் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.
ராமச்சந்திரன், சேஷசமுத்திரம்.
மின் விளக்கு வசதியின்றி அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை- பெருவங்கூர் ஏரிக்கரை சாலையோரத்தில் மின் விளக்கு வசதியின்மையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
கோவிந்தன், பெருவங்கூர்.
ைஹமாஸ் மின் விளக்கு தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார்மடம் சந்திப்பில் ைஹமாஸ் மின் விளக்கு இல்லாதாதல் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
அசோகன், மாடூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement