ஜெலட்டின் கடத்தல் வழக்கில் மேலும் மூன்று பேர் கைது
ஜெலட்டின் கடத்தல் வழக்கில் மேலும் மூன்று பேர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம், ஜெலட்டின் கடத்தல் வழக்கில், ஏழு பேர் கைதான நிலையில் நேற்று மீண்டும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலை பகுதியில் கடந்த பிப்., 28 மாலை, 5:00 மணியளவில், அருவங்காடு பிரிவு பகுதியில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது சேலத்திலிருந்து, கோவை நோக்கி சென்ற ஈச்சர் லாரியை நிறுத்திய போது, அதன் ஓட்டுனர், கீழே இறங்கி வாகனத்தின் ஆவணங்களை கொடுப்பது போல் வந்து, திடீரென
தப்பினார். வாகனத்தில் போலீசார் சோதனை செய்த போது, நான்கு டன் ஜெலட்டின் குச்சிகள், அம்மோனியா நைட்ரேட் ஆகிய வெடி பொருட்கள் இருந்தது.
வெடி பொருட்களை மாவட்ட எஸ்.பி., உத்தரவின்படி, வேலுார் அருகே உள்ள இருக்கூரில், அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கரூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிருபாசங்கர், 45, பார்த்திபன், 39, ராஜேந்திரன், 54, அப்துல் நஜீத், 40, சுருளிராஜன், 44, ராமலிங்கம், 51, பழனிச்சாமி, 57 ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று, இதே வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி, சேலம் பகுதியை சேர்ந்த ராஜா அண்ணாமலை, 47, லிங்கேஸ்வரன், 25, வருண், 33, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஜெலட்டின் கடத்தல் வழக்கில் கைது எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்
-
பொது விநியோக திட்டத்தில் நாளை குறைகேட்பு முகாம்
-
முதியவரை தாக்கிய வாலிபர் கைது
-
சிறுவர் பூங்காவில் கலெக்டர் ஆய்வு
-
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா
-
டி20 கிரிக்கெட் இறுதி போட்டியில் லயன்ஸ் அணி கோப்பை வென்றது
-
பெஞ்சல்' புயல் பயிர் சேத நிவாரணம்... ரூ.161 கோடி; 1.61 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கல்