கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்
கொடிமுடியில் இருந்து பழனிக்குசிறப்பு பஸ் இயக்க வலியுறுத்தல்
கரூர்:-கொடுமுடியிலிருந்து, பழனிக்கு தென்னிலை, சின்னதாராபுரம் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரம் திருவிழாவில் பங்கேற்க, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வர். இவர்கள், கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்காவடி சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்த செல்கின்றனர். இந்தாண்டு ஏப்., 11ல், பங்குனி உத்திரத்திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு, பங்குனி மாதம் 1ம் தேதி முதல் வைகாசி மாதம் வரை, மூன்று மாதத்திற்கு பக்தர்கள் வசதிக்கேற்ப, தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பங்குனி உத்திரம் திருவிழாவிற்கு, மாலை அணிவித்த பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில், புனித நீராடிய பின் பழனிக்கு செல்கின்றனர். இவர்கள் பழனிக்கு செல்ல, கரூருக்கு செல்ல வேண்டி உள்ளது. இங்கிருந்து கரூர் வழியாக பழனிக்கு செல்ல, 130 கி.மீ துாரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
அதேசமயம் கொடிமுடியிலிருந்து, தென்னிலை, சின்ன தாராபுரம் வழியாக, 95 கி.மீ., துாரத்தில் பழனிக்கு சென்று விடலாம். கொடுமுடியிலிருந்து, நேரடியாக பஸ் வசதி இல்லாததால், பக்தர்கள் தேவையில்லாமல், 35 கி.மீ. பயணிக்கும் போது பணம், நேரம் விரயமாகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், விழா காலங்களிலாவது கொடுமுடியிலிருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,
-
தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு
-
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
-
கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்
-
புகார் பெட்டி
-
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு