வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர்

வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர் இடமாற்றம்


ஆத்துார்:சேலம் மாவட்டத்தில் இரவில் வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அப்போது ஆத்துார் சப்-டிவிஷனில், மல்லியக்கரை, தம்மம்பட்டி, வீரகனுார் ஆகிய இடங்களில், இரவு நேர தணிக்கையில் ஈடுபடாதது தெரிந்தது. இதனால் தனிப்படையினர், எஸ்.பி., கவுதம் கோயலுக்கு அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து வீரகனுாரில் எஸ்.எஸ்.ஐ., நாராயணன், முதல்நிலை போலீஸ்காரர் இளங்கோ; தம்மம்பட்டியில் ஏட்டு சரவணன், முதல்நிலை போலீஸ்காரர் ராஜா; மல்லியக்கரை எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ், ஏட்டு சின்னையன் ஆகியோரை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.

Advertisement