இளம்பெண் மாயம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சத்யா, 22; இவரது பெற்றோர் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வருவதால், தாய் வழி பாட்டி ஆண்டாள் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த, 7ம் தேதி மதியம் 2:00 மணியளவில், வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தாய் சித்ரா திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement