எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
கோவில்பாளையம் : பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதாவில் உறுப்பினர் சேர்ப்பு முடிவு பெற்று கடந்த நவம்பர் மாதம் கிளை நிர்வாகிகள் தேர்தலும், இதையடுத்து ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் தேர்தலும் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் நியமனத்தையடுத்து, ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் ஒப்புதலின் பேரில், சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய பா.ஜ., துணைத் தலைவர்களாக தேவராஜ், சதீஷ்குமார், கவுதமன், நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலாளர்களாக ரவிக்குமார், விஸ்வநாதன், செயலாளர்களாக காயத்ரி, பிரகாஷ், தமிழரசு ஆகியோரும், பொருளாளராக குணசேகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என தெரிவித்துள்ளார்.