புகார் பெட்டி
குப்பைகளால் துர்நாற்றம்
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்று பாலம் அருகே கொட்டப்படும் குப்பைகளால் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள, வாகன ஒட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
ராமகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி.
பயணிகள் நிழற்குடை இருக்கை சேதம்
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., பயணிகள் நிழற்குடையின் இருக்கைகள் உடைந்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சந்தோஷ், கள்ளக்குறிச்சி.
சாலையில் மண் குவியல்
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் குவியல்களால் வாகன ஓட்டிகளால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பாலாஜி, கள்ளக்குறிச்சி.
சாலை மேம்படுத்தப்படுமா
திருக்கோவிலுார் செவலை ரோட்டை அகலப்படுத்தி மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, திருக்கோவிலுார்.
சட்ட விரோதமாக மணல் திருட்டு
திருக்கோவிலுார் மணம்பூண்டி தென்பெண்ணை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், மணம்பூண்டி.
சி.சி.டி.வி., கேமரா பழுது
வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சி.சி.டி.வி., கேமரா பழுதால் சிகிச்சைக்காக வருவோர்களிடம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
சங்கரசுப்ரமணியன், வடபொன்பரப்பி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
புதுப்பட்டு பஸ் நிலையத்தில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், புதுப்பட்டு.
போக்குவரத்து பாதிப்பு
ரங்கப்பனுாரில் உலர்களம் இல்லாததால் சாலையில் விவசாய விளைபொருட்களை காய வைக்கும் விவசாயிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
நவீன், ரங்கப்பனுார்.