விவேகானந்தர் கோப்பையை தட்டியது கற்பகம் பல்கலை

கோவை : பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி முதல் பரிசை வென்றது.

பெரியநாயக்கன்பாளையம் சுவாமி விவேகானந்தர் உடற்கல்வியியல் கல்லுாரியில், சுவாமி விவேகானந்தர் கோப்பைக்கான வாலிபால் போட்டி, இரு நாட்கள் நடந்தது. மாநில அளவிலான இப்போட்டியில், தமிழகத்தில் சிறந்த எட்டு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த அரையிறுதி போட்டியில், கற்பகம் பல்கலை அணி, எஸ்.டி.சி., கல்லுாரி அணியை, 3-2 என்ற செட் கணக்கில் வென்றது. இறுதிப் போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் அணியுடன், கற்பகம் பல்கலை மோதியது.

இதில், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கற்பகம் பல்கலை அணி முதல் இடம் பிடித்தது.

வெற்றி பெற்ற அணியினரை, கற்பகம் கல்வி குழுமங்களின் தாளாளர் வசந்தகுமார், முதன்மை கல்வி இயக்குனர் முருகையா, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement