மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உருமாண்டபாளையத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.

இப்பள்ளி கடந்த, 1924ம் ஆண்டு துவக்கப்பட்டது. நூறு ஆண்டுகள் நிறைவடைந்த இப்பள்ளியில் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கோமதி வரவேற்றார். ஆசிரியர் விஜயலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். நூற்றாண்டு விழா சுடர் ஏற்றி வைத்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி நிறுவனரின் உருவப்படம் முன்னாள் மாணவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், பள்ளியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து கலந்து ஆலோசனை கூட்டம் நடந்தது. விழாவில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கும்மி பாடல், நாட்டுப்பற்று பாடல், நடனங்கள், திருக்குறள் ஒப்புவித்தல், தேச தலைவர்கள் குறித்த தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டிகள் நடந்தன. ஆண்டு விழாவை ஒட்டி நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement