பஸ் ஸ்டாண்ட் அவசியம்
உடுமலை : உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, பொதுமக்கள் போக்குவரத்துக்கு பஸ்களையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலையிலிருந்து பழநிக்கு அதிக அளவில் பஸ்கள் செல்கின்றன. இதில், உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.
ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்ற செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement