மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

எம்.ஜி.ஆர்., நகர்: எம்.ஜி.ஆர்., நகர் பச்சையப்பன் 2வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் பரமசிவம், 14; அதே பகுதி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்.

கடந்த 8ம் தேதி மாலை, கடைக்கு சென்ற பரமசிவம் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில், 9ம் தேதி நாகராஜ் புகார் அளித்தார்.

இந்நிலையில், நந்தம்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாண்டி முனீஸ்வரர் ஆத்துக் கோவில் அருகே, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 70 அடி ஆழ கிணற்றில், பரமசிவம் இறந்து கிடப்பது, நேற்று முன்தினம் தெரிய வந்தது.

அங்கு சென்ற போலீசார், மாணவனின் சடலத்தை மீட்டு கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். மாயமான சிறுவன், கிணற்றில் எப்படி விழுந்திருப்பான் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement