வாகன வசதியின்றி தவிக்கும் கீழடி தொல்லியல் துறை
கீழடி: கீழடி அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அரசு வாகன வசதியில்லாததால் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு 17 கோடியே 80லட்ச ரூபாய் செலவில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன, கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு பார்வையாளர்கள் தினசரி 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
இங்கு தொல்லியல் துறை இயக்குனர் ( கீழடி பிரிவு) ரமேஷ், உதவி இயக்குனர் அஜய்குமார் தலைமையில் தொல்லியல் துறை மாணவ, மாணவியர்கள், 50க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மேலும் அருங்காட்சியகத்திலும் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கீழடி தொல்லியல் பிரிவிற்கு வாகன வசதி ஏதும் இல்லை.
அதிகாரிகள் பெரும்பாலும் வாடகைக்கு வாகனங்களை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு பொருட்களை காட்சிப்படுத்தவும் பொருட்களை வாடகை வாகனங்களில் தான் கொண்டு சென்று வருகின்றனர்.
அருங்காட்சியகத்தில் இருந்து திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் வாடகை வாகனம் பயன்படுத்தி வருகின்றனர்.
தொல்லியல் துறைக்கு ஏற்கனவே ஜீப் வழங்கப்பட்டிருந்து. தற்போது அந்த வாகனம் சென்னைக்கே கொண்டு செல்லப்பட்டு விட்டது. திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க மதுரை அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.
அரசு வாகனம் இல்லாததால் மதுரை நகருக்குள் வாடகை வாகனம் மூலம் சென்று வருவது மிகவும் கால தாமதம் ஆகி வருவதுடன் தேவையற்ற பொருட்செலவையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!