தாயமங்கலம் கோயில் பங்குனி விழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பொங்கல் விழா ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.
தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தீச்சட்டி,கரும்புத்தொட்டில்,ஆயிரங்கண் பானை,முடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர்.இந்தாண்டிற்கான திருவிழா வருகிற மார்ச் 29ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வரும் ஏப்.5ம் தேதி நடைபெற உள்ளது.மறுநாள் 6ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது.7ம் தேதி காலை 7:20 மணிக்கு பால்குடம் , மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், 10:00 மணிக்கு பூப்பல்லக்கு நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!