பட்ஜெட்டில் காரைக்கால் புறக்கணிப்பு பி.ஆர்.,சிவா எம்.எல்.ஏ., வெளிநடப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்தார். அப்போது, பி.ஆர்.சிவா எழுந்து, காரைக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என கூறி, வெளிநடப்பு செய்தார்.
அவர் கூறியதாவது:
காரைக்கால் பிராந்தியம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. வெறும் வாக்குறுதிகள் மட்டுமே சட்டசபையில் அளிக்கப்படுகிறது. இது செயல்வடிவத்திற்கு வருவதில்லை. காரைக்கால் பகுதியில் சுகாதார கட்டமைப்பு இல்லை. உயர் சிகிச்சைக்காக திருச்சி, தஞ்சாவூர் செல்ல வேண்டியுள்ளது. இந்த பட்ஜெட்டிலாவது காரைக்காலில் மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும் என, எதிர்பார்த்தோம். ஆனால் வழக்கம்போல் காரைக்கால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் சுகாதார கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கான அறிவிப்பு முதல்வர் பட்ஜெட் உரையில் இல்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தேன்' என்றார்.
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!