ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்

20

சென்னை: வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.மு.க., கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.


கடந்த 1997ல் வெளிநாட்டில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக ஜவாஹிருல்லா மீதான வழக்கு சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையத் நிஷார் அகமத், ஜி.எம்., ஷேக் மற்றும் முகமது கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.


இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார். மேலும், மனுதாரர்களின் மேல்முறையீட்டுக்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது.

Advertisement