மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெற முடியும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!
* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
* இலங்கை தமிழர் நலனுக்காக 3 ஆயிரம் வீடுகள் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
* பழமையான தேவாலயம், தர்காக்களை புதுப்பிக்க தலா ரூ.10 கோடி
* புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி
* 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
* மாநில அரசின் ஆண்டு வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும்
* வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
* வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாகுறை விகிதம் குறையும்.
* 5 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
* 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.









மேலும்
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!