சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!

4


சென்னை: 'கோவை மாவட்டம், சூலூர் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்' என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:




* விண்வெளித் தொழில்நுட்ப நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

* மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு; இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.



* சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்கத்தை சேர்த்து உடற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்


* பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.


* சென்னைக்கு குடிநீர் வழங்க ஆறாவது புதிய நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகே அமைக்கப்படும்.


* கோவை மாவட்டம் சூலூர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்.


* விருதுநகரில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும்.
* கடலூர், தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான தொழில் மூலம் 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதனால் 17,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.



* அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு


* கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு


* 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.


* ரூ.11,721 கோடியில் புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.


* ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்


* ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம் அமைக்கப்படும்.


* புதிதாக 1,125 மின் பஸ்கள் அறிமுகம் செய்யப்படும். சென்னைக்கு 950 பஸ்கள், மதுரைக்கு 100 பஸ்கள், கோவைக்கு 75 பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்.

Advertisement