தொண்டான் குளத்தில் குவியும் குப்பை

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், தொண்டான் குளம் உள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படும் அந்த குளம், அப்பகுதி நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாத்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதமாக, குளத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் குளத்தின் நீர் மாசு அடைந்து அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்ற கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி நிர்வாகம், தொண்டான் குளத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி, குளத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும், கழிவுகள் குவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement