விருதுநகர், அருப்புக்கோட்டை மிளகாய் வத்தல் வரத்து

சாயல்குடி: சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதி மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், பஜார் உள்ளிட்ட இடங்களில் அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதி வியாபாரிகளிடம் வாங்கி குண்டு மிளகாய் வத்தல் விற்பனை செய்கின்றனர்.

சாயல்குடி மளிகை கடை வியாபாரி ராமர் கூறியதாவது:

சிக்கல், மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, டி.எம்.கோட்டை, எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, கொண்டுநல்லான்பட்டி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மிளகாய்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக காரத்தன்மை கொண்ட குண்டு மிளகாய் இப்பகுதியில் பிரசித்தி பெற்றது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் நிலங்களில் மிளகாய் உலர்த்துவதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது. இதனால் உள்ளூர் மிளகாய் வியாபாரிகளிடமிருந்து வத்தல்பெறுவதற்கு சில வாரங்கள் ஆகும்.

இதனால் அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதியில் இருந்து வாங்கி வந்து சில்லரை விலையில் குண்டு மிளகாய் கிலோ ரூ.250க்கும் சம்பா மிளகாய் கிலோ ரூ.150க்கும் விற்பனை செய்கிறோம் என்றார்.

Advertisement