ஊராட்சி செயலர்கள் தர்ணா: 270 பேர் தற்செயல் விடுப்பு 

சிவகங்கை: கிராம ஊராட்சி செயலர்களுக்கு முறையான காலமுறை சம்பளம் வழங்கி, பென்ஷன் திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு ஊராட்சி செய லர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

முறையான கால முறை சம்பளத்துடன், பென்ஷன் திட்டத்திலும் ஊராட்சி செயலர்களை சேர்க்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் ராமநாதன், அஞ்சுகம், மஞ்சுளா, மாநில நிர்வாகி மீனாட்சி மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நேற்றைய போராட்டத்தில் மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலர்களில் 270 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement