ஜூன் மாதம் பிறக்கும்... வாகனங்கள் 'பறக்கும்'

கோவை; கோவை - அவிநாசி சாலை உயர் மட்ட மேம்பால பணிகள், வரும் ஜூனில் நிறைவடைந்து விடும் என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை - அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை, 10.10 கி.மீ., துாரத்தில் 1,621.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், உயர்மட்ட மேம்பாலப்பணிகளை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
கட்டுமானப்பணிகள் தற்போது, 92 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க, கலெக்டர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்துப்பணிகளும் வரும் மே மாதம் நிறைவடையும்; அதிகபட்சம் ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும் என்று, கலெக்டரிடம் கூறினோம். அவர் விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்' என்றனர்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சமுத்திரக்கனி, உதவி கோட்டப்பொறியாளர்கள் மகேஸ்வரி, அகிலா, இளநிலைப்பொறியாளர்கள் கார்த்திகேயன், விக்னேஷ், காவியா, நந்தினி திட்ட மேலாளர் அருணாகுமார், துணைத் திட்ட மேலாளர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!