விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி அரசு ஒதுக்கீடு

விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் குறித்த அறிவிப்புகள்;

பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. இதற்காக வரும் நிதியாண்டில் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகர மற்றும் கிராமப்புறங்களில் 9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், 4.50 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறத்தில் சிறிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் 7 கோடி மதிப்பீட்டில் செயற்கை தடகளப் பாதை அமைக்கப்பட உள்ளது.

Advertisement