கோவில் புனரமைப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு

பட்ஜெட்டில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு வாரியம் குறித்த அறிவிப்புகள்:

திருக்கோவில்களின் ஒரு கால பூஜைக்காக தற்போது 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை 30 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உத்தேசித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதிதிராவிட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில் புனரமைக்க தற்போது வழங்கப்பட்டு வரும் 3.50 லட்சம் ரூபாய் நிதியுதவியை 5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்து சமய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க இந்த நிதியாண்டில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனாம் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் புனரமைப்பிற்கு நடப்பபு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Advertisement