தீயணைப்பு துறை முக்கிய அம்சங்கள்

பட்ஜெட்டில் தீயணைப்பு துறையின் முக்கிய அம்சங்கள்:

ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு

தீயணைப்புத் துறையின் சேவை, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு காலங்களில் இன்றியமையாத ஒன்றாகும். இத்துறையின் சேவையை மேலும், மேம்படுத்த தேவையான அனைத்து நவீன உபகரணங்களான வான் துாக்கிகள், தீ பாதுகாப்பு உடைகள், கான்கிரீட் கட்டர்கள், ஏர் கம்ப்ரசர், புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் கேமரா கொண்ட லேப் டாப்கள் போன்றவை கொள்முதல் செய்யப்படும்.

இதற்காக, பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையில் காலியாக உள்ள தீயணைப்பு நிலைய அதிகாரி, தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகன ஒட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்ட நிலையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, பணி ஆணைகள் விரைவில் வழங்கப்படும். ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் காலதாமதம் இன்றி பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement