சிலம்பம் போட்டிகளில் மாணவர்கள் சாதனை  

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியம் ஈச்சங்குப்பம் கிராம மாணவர்கள் சிலம்பம் கலையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

இக் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் தினமும் அதிகாலையில் 4.00 மணிக்கு எழுந்து அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முட்டத்துார் சிலம்பம் பள்ளிக்குச் சென்று பயிற்சி எடுத்தனர்.

மாணவன் விஷ்ணு,19; மத்திய அரசு விளையாட்டு அமைச்சகம் நடத்திய சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் இடத்தையும், தமிழக அரசின் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் இடத்தையும் வென்றுள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய்,13; யோகேஸ்வரன்,14; ஆகியோர் மாவட்ட அள விலான போட்டியில் மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளனர். சிதம்பரம் , புதுச்சேரியில் தனி யார் அமைப்பு நடத்திய மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் மாணவர் கள் மோகன பிரியா,11; தஷ்வினி, 13; ரித்திகா,10; மனோஜ் குமார்,12; ஆகியோர் இரண்டாம் இடத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்களும், கிராம பொதுமக்களும், பெற்றோர்களும், பயிற்சியாளர் சுரேந்தர் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertisement