புதுச்சேரி பட்ஜெட் ; முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி: அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த சிறந்த பட்ஜெட்டாக உள்ளது என என்.ஆர்.காங்., சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெய ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக இந்த ஆண்டு முதல் ரூ. 2000 வழங்கப்படும்.

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும். காமராசர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டு முதல் 5 லட்சம் ரூபாயாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

முதியோர், விதவை, முதிர்கண்ணி, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சிறப்புக் கூறு திட்ட நிதியாக ரூ. 526,82 கோடி ஒதுக்கீடு மற்றும் திருக்கோவில்களின் ஒரு கால பூஜைக்காக வழங்கப்படும் நிதி 30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை புதுச்சேரி மக்களுக்கு அளித்த முதல்வருக்கு நன்றி.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement