திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு

வானுார் ; திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் மகளிர் தினத்தையொட்டி பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல், ஒட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது.

போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினர்.

விழாவையொட்டி, அனைத்து பெண்களுக்கும், பிளாஸ்டிக் வாலி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள், பெண்கள் பெற்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement