ரவுடி உடல் இறுதி ஊர்வலம் கடைகள் அடைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி அய்யப்பன், 48. அரசியல் பிரமுகரான இவர், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் என பலரைமிரட்டி மாமூல் வசூல் செய்தது தொடர்பாக புதுச்சேரி, தமிழக போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.

திருவண்ணாமலையில், தங்கியிருந்த இவரை, கடந்த 9ம் தேதி, 10 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று வேட்டவலம் பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம், திருவண்ணாமலை அரசு மருத்துமனையில், அய்யப்பனில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதுச்சேரியில் அவரது உறவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

நேற்று மதியம் 1:00 மணியளவில் அவரது உடலை, ஆதரவாளர்கள் சன்னியாசித்தோப்பு சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால், வாணரப்பேட்டை பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Advertisement