அரசு பள்ளி மாணவிகள்  சிலம்பத்தில் சாதனை

விழுப்புரம்; மாநில அளவிலான சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த சிந்தாமணி அரசு பள்ளி மாணவிகள் நிர்விந்தா (6ம் வகுப்பு) , கோஷினி ( 7 ம் வகுப்பு ). இவர்கள், சிலம்பம் கற்பதற்காக சொந்த ஊரை விட்டு வந்து, தங்கள் உறவினர் வீட்டில் தங்கி, கலையை கற்று வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோஷினி, விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்விந்தா. இருவரும் தனது பாட்டி வீட்டில் தங்கி, 5 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பயிற்சியாளர் சுரேந்தர் அளித்த ஊக்கத்தின் காரணமாக, இவர்கள் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில போட்டிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். ஈரோடு, திருச்சி, சென்னை, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

Advertisement