காரைக்காலில் 6.5 செ.மீ., மழை

காரைக்கால்: காரைக்காலில் பெய்த கன மழையால் திருநள்ளாறு கடை வீதியில் மழைநீர் தேங்கியது.
காரைக்கால் மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. ஆனால், நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை காரைக்காலில் மழை அளவு 6.5 செ.மீ., ஆக பதிவாகியது.
நேற்று காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்தது. நெடுங்காடு, திருப்பட்டினம், திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கன மழை கொட்டியது. திருநள்ளார் கடை வீதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. குப்பை அகற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால், உள்ளூர் பணியாளர்கள் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!
Advertisement
Advertisement