விழுப்புரத்தில் இருந்து பக்தர்கள் குழு; காசிக்கு ஆன்மிக பயணமாக புறப்பாடு

விழுப்புரம்; விழுப்புரத்தில் இருந்து பக்தர்கள் குழுவினர், காசிக்கு ஆன்மிக பயணம் புறப்பட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், விழுப்புரம் மண்டலத்திலிருந்து காசி ஆன்மிக பயணத்திற்கு, 20 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவினர், விழுப்புரம் இணை ஆணையாளர் அலுவலகத்திலிருந்து, ராமேஸ்வரம் புறப்பட்டனர். விழுப்புரம் இணை ஆணையர் மோகனசுந்தரம் மேற்பார்வையில், பயண வாகனத்தை, விழுப்புரம் உதவி ஆணையர் சக்திவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இணை ஆணையர் அலுவலக மேலாளர் கண்ணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியின்போது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர்கள் வேலரசு , அறிவழகன், ஆய்வாளர்கள் சங்கீதா, தினேஷ், புகழேந்தி, கவிதா ,சத்தியவாணி, பாலமுருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். இந்த ஆன்மிக பக்தர்கள் குழுவினர், சிறப்பு பஸ் மூலம் ராமேஸ்வரம் சென்றடைகின்றனர். அங்கிருந்து ரயில் மூலம் காசிக்கு சென்று தரிசனம் செய்கின்றனர். பின், 19ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து விழுப்புரம் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?