வாழைத்தார்கள் விற்பனைவிலை அதிகரிப்பால் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று பூவன் வாழைத்தார்கள் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தை விட, நேற்று வாழைத்தார்களின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement